உலகின் தலைசிறந்த தொழில் நுட்ப கலைஞர்களால் உருவாகும் 2.0 படம்

Bookmark and Share

உலகின் தலைசிறந்த தொழில் நுட்ப கலைஞர்களால் உருவாகும் 2.0 படம்

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 2.0 ( எந்திரன் படத்தின் பாகம் 2 ) .

எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான திரு. ரஜினி காந்த் அவர்களின் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த பிரம்மாண்டமான படைப்பான " 2.0" வின் (எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம்) படப்பிடிப்பு சென்னையில் டிசம்பர் 16 ( புதன் கிழமை ) ஆன இன்று துவங்கியது.

லைகா நிறுவனம் சார்பில் படத்தின் ஆரம்ப விழாவை மிகபிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்தில் சென்னையில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக , படக்குழுவினர் படப்பிடிப்பை மிகச் சாதாரணமான முறையில் ஆரம்பித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்க பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் கதாநாயகனுக்கு இணையான மிகமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ் கரன் இப்படத்தை தயாரிக்க , ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவு நீரவ் ஷா , கலை முத்து ராஜ் , வி.எப்.எக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீநிவாஸ் மோகன்.

எழுத்தாளர் / வசனகர்த்தா திரு. ஜெயமோகன் முதன் முறையாக இயக்குநர் ஷங்கர் அவர்களுடன் இனைந்து பணியாற்றுகிறார்.

படத்தொகுப்பு படத்தொகுப்பாளர் ஆண்டனி , சவுண்ட் டிசைன் ரசூல் பூக்குட்டி.இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படவுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து தலைசிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து உலக தரத்திலான மிகச்சிறந்த படைப்பை உருவாக்கவுள்ளனர்.

ஜுராஸிக் பார்க் , அயர்ன் மேன் , அவெஞ்ஜர்ஸ் போன்ற பிரம்மாண்ட படைப்புகளில் பணியாற்றிய உலகின் தலைசிறந்த அணிமெட்ரானிக்ஸ் நிறுவனமான "லீகசி எபக்ட்ஸ் ஆப் யு.எஸ்.ஏ" இப்படத்தில் இணையவுள்ளது.

படத்துக்கான சிறப்பு உடையலங்காரங்களை ட்ரான் , வாட்ச் மேன் போன்ற பிரபல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய மேரி.இ.வாட் ( குவாண்டம் எபக்ட்ஸ்) அவர்கள் 2.0 வில் பணியாற்றுகிறார்.

இப்படகுழுவில் புகழ் " ட்ரான்ஸ்பார்மர்ஸ்" புகழ் சண்டை பயிற்சி இயக்குநர் கென்னி பேட்ஸ் பணியாற்றவுள்ளார். வி.எப்.எக்ஸ் வேலைகளை லைப் ஆப் பை பட புகழ் ஜான் ஹுக்ஸ் மற்றும் வால்ட் ( தால் பிலிம்ஸ்) பணியாற்றவுள்ளனர்.இப்படத்தின் துவக்க விழாவை இன்று மிகவும் எளிய முறையில் 2.0 படக்குழுவினர் கொண்டாடினர்.

இவ்விழாவில் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ் கரன், இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலை இயக்குனர் முத்துராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு - லைகா புரோடக்ஷன்ஸ்

இயக்கம் - ஷங்கர்

வசனம் - ஜெயமோகன்

இசை - ஏ.ஆர்.ரகுமான்

ஒளிப்பதிவு - நிரவ் ஷா

VFX - ஸ்ரீனிவாஸ் மோகன்

சவுண்ட் டிசைனிங் - ரசுல் பூக்குட்டி

கலை - முத்துராஜ்

சிறப்பு உடைகள் - மேரி.இ.வாட் / குவண்டம் எபக்ட்ஸ்


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions