எந்திரன்-2 படத்தில் விக்ரமுக்கு பதிலாக பாலிவுட் ஹீரோ?

Bookmark and Share

எந்திரன்-2 படத்தில் விக்ரமுக்கு பதிலாக பாலிவுட் ஹீரோ?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். அவருக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. 

இந்நிலையில், இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் விக்ரம் கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு பாலிவுட் நடிகரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினரிடம் யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகரை நடிக்க வைப்பதன் மூலம் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்பதாலேயே தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

எனினும், இந்த படத்தில் விக்ரமை நீக்க இயக்குனர் ஷங்கருக்கும், ரஜினிகாந்துக்கும் விருப்பமில்லையாம். எனவே, லைக்கா நிறுவனத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் தற்போது இருவரும் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதற்கு சரியான முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions