எந்திரன்-2 வை தொடங்கிய ஷங்கர்

Bookmark and Share

எந்திரன்-2 வை தொடங்கிய ஷங்கர்

பிரமாண்டத்துக்கு பேர் போன ஷங்கர் ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் என்ற இரண்டு மெகாஹிட் படங்களை இயக்கினார். அதையடுத்து, விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கினார். 

இந்த நிலையில், ஷங்கரின் அடுத்த படத்தில் நடிப்பது யார்? அது என்ன படம்? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், அடுத்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் ரஜினியுடன் எந்திரன்-2 படம் மூலம் இணையவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

தற்போது எந்திரன்-2 படத்தை எந்திரனை விடவும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருக்கும் ஷங்கர், அப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார். இதற்காக சில ஹாலிவுட் டெக்னீசியன்கள் மற்றும் அனிமேஷன் டெக்னீசியன்களுடன் அவர் முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளார்.

கபாலி படத்துக்கு 60 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள ரஜினி, அந்த படத்தை இந்த ஆண்டுக்குள் முடித்து விடுவார். எந்திரன்-2 படத்தின் அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியிடப்பட்டு, ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions