எந்திரன் - 2... என்னதான் நடக்குது?

Bookmark and Share

எந்திரன் - 2... என்னதான் நடக்குது?

ஐ படத்தை தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் எடுக்கவிருக்கிறார். ரஜினி ஹீரோவாக நடிக்க உள்ள இந்தப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது.

எந்திரன் - 2 படத்தில் ஹீரோவுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ரஜினி விரும்பினாராம்.

அதன் காரணமாக, அண்மையில் மும்பை சென்ற ரஜினியும், ஷங்கரும்,  இந்த படம் சம்பந்தமாக அமீர்கானுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்! எந்திரன்-2 கதையைக் கேட்ட அமீர்கான், படத்தில் நடிக்க அப்போதே ஓகே சொன்னார் என்றும் கூறப்பட்டது.  அடிப்படை இல்லாத செய்தி என்று அடித்துச் சொல்லுமளவுக்குத்தான் இருக்கிறது இந்த தகவல்! ஆனால், ரஜினி மற்றும் ஷங்கர் தரப்புக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் இந்த தகவல் அனைத்தும் உண்மை என உறுதி செய்தனர்.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக ஒரு தகவல்! அதன்படி எந்திரன் -2 படத்தில் அமீர்கான் நடிக்கவில்லையாம்! எந்திரன் -2விலிருந்து விலகினார்? ஷங்கர் எந்திரன் படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடக்கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அப்படியிருக்க, பிரம்மாண்டமான முறையில் எடுக்கவிருக்கும் எந்திரன்-2வை எடுத்து முடிக்கவும் அதே கால அளவு எடுக்கப்படும்.

எனவே, அமீர்கான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள் பாதிக்கப்படும் என்றும், இது தவிர அமீர்கான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள மற்ற புராஜெக்ட்டுகளும் பாதிக்கப்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்தாராம்! 


Post your comment





Related News
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions