எந்திரன் 2ல் நடிக்க அர்னால்டிற்கு 100 கோடி சம்பளம்

Bookmark and Share

எந்திரன் 2ல் நடிக்க அர்னால்டிற்கு 100 கோடி சம்பளம்

கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த ’எந்திரன்’படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படம் ரூ.375 கோடியை வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 300 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்க இயக்குநர் ஷங்கர் அதிரடி திட்டமிட்டு இருக்கிறார் என்று கடந்த சில மாதங்களாக அனல் பறக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனை தயாரிக்க கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. கத்தி படத்திற்கு பிரச்னை எழுந்தபோது “கத்தி பட தயாரிப்பு செலவு எங்கள் நிறுவனத்தின் ஒரு நாள் வருமானம்” என்று அந்த நிறுவனம் சொன்னது. அதனால் 300 கோடி அந்த நிறுவனத்துக்கு பெரிய விஷயம் இல்லை.

தயாரிக்க ஒப்புக் கொண்ட நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. ஹீரோ ரஜினி, ஹீரோயின் & வில்லன் ரஜினி அளவுக்கு உலகம் முழுவதும் பாப்புலராக இருக்க வேண்டும் என்பது தான்.

இதனால் ஹீரோயியை விட முக்கியம் வில்லன் கதாபாத்திரம். எந்திரனில் ரஜினியே வில்லனாக நடித்து பிரமாதப்படுத்தியிருப்பார். இதில் அதற்கு சமமாக ஒரு ஹீரோ வேண்டும் என்பதால் கமல்ஹாசன், விக்ரம், அமீர்கான் ஆகியோருடன் பேசப்பட்டது. ஆனால் அனைவருமே உறுதியாக நடிக்க மறுத்து விட்டார்கள்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் நாங்கள் ஹாலிவுட் நடிகரை பிக்ஸ் பண்ணுகிறோம் ஓகேவா என்று ஷங்கரிடம் கேட்க, அவர் ஓகே சொன்னதோடு தனது சாய்சாக அர்னால்டை கூறியிருக்கிறார். சர்வதேச அளவில் பெரிய நிறுவனமான லைக்கா, அர்னாலுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஹாலிவுட் படம் போன்று உலக அளவில் வெளியிடுவதாக இருந்தால், தான் நடிப்பதாக கூறியிருக்கிறாராம். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும், அர்னால்டிற்கு 100 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions