எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...?!

Bookmark and Share

எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...?!

விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாம் 50 கோடி, 100 கோடி, 150 கோடி வசூல் செய்திருப்பதாக ஆதரமற்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கிளப்பிவிடப்படும் அச்செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி யாரும் ஆராய்வதில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, உண்மையிலேயே முதன் முதலில் 100 கோடி ரூபாயை வசூல் செய்த படம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'சிவாஜி' படம்தான்.

இதன் மூலம் தமிழ் சினிமாவும் 100 கோடியை வசூல் செய்ய முடியும் என்ற வழியை காட்டியதோடு நம்பிக்கையையும் ஏற்படுத்தினார் ஷங்கர். அதன்பிறகு இதே ஷங்கர் - ரஜினி கூட்டணிதான் 'எந்திரன்' படத்தின் மூலம் உலகளவில் 200 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

அது மட்டுமல்ல, இந்திய சினிமாத்துறையினரையே ஆச்சர்யத்தில் வாய்ப்பிளக்க வைத்தார்கள். ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என இந்தியாவில் உள்ள சினிமா கலைஞர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், 'எந்திரன் 2' படத்தின் பட்ஜெட் 260 கோடி என்ற தகவல் அடிபடுகிறது. 260 கோடி செலவு செய்து படம் எடுப்பதால் 350 கோடிக்கு குறையாமல் படத்தை பிசினஸ் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளாராம் லைகா சுபாஸ்கரன்.

350 கோடி பிசினஸ் என்றால்... வசூல் எத்தனை கோடியாக இருக்கும்? தமிழ்சினிமா வசூலுக்கு புதிய எல்லையை வகுத்து சாதனை படைக்கும்படி இருக்கும் என்பது நிச்சயம்.


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions