'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்

Bookmark and Share

'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்

இயக்குனர் ஷங்கர் 'எந்திரன் 2' படத்தின் முதற்கட்ட பணிகளில் முழுவீச்சுடன் பணியாற்றி வருகிறார்.

ரஜினி நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உள்ள காட்சிகளுக்கான முன் வேலைகள் என பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இப்படத்தில் ரஜினியோடு, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர். தற்போது அர்னால்டு, ஷங்கரிடம் ஹாலிவுட்டில் இருக்கும் திரைக்கதை அமைப்பினரோடு இணைந்து 'எந்திரன் 2' படத்துக்கான திரைக்கதையை மாற்றி அமைக்கும்படி தெரிவித்திருக்கிறாராம்.

அவ்வாறு மாற்றும் திரைக்கதை அமைப்பு தனக்கு பிடிக்கும் பட்சத்தில் மட்டுமே ஒப்பந்தமாவதாகவும் அர்னால்டு கூறியிருக்கிறாராம். அர்னால்டின் இந்த திடீர் நிபந்தனை, ஷங்கருக்கு சற்றே பின்னடைவு தந்திருக்கிறது.

இறுதியில் ஷங்கர் என்ன முடிவு செய்யவிருக்கிறார் என்பது தான் படக்குழுவினரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.


Post your comment





Related News
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions