எந்திரன் மீதான வழக்கில் ஷங்கருக்கு எதிரான தீர்ப்பு..? எந்திரன்2..?

Bookmark and Share

எந்திரன் மீதான வழக்கில் ஷங்கருக்கு எதிரான தீர்ப்பு..? எந்திரன்2..?

எழுத்தாளர் சுஜாதா, ஒரு பிரபல இதழில் 80களில் ஜீனோ என்ற ரோபோ நாய்குட்டியை மையமாக வைத்து ‘என் இனிய இயந்திரா’ என்ற தொடர்கதையை எழுதினார். ரோபோ நாய்குட்டியை ரோபோ மனிதனாக்கி ஏறக்குறைய அதே சாயலில் உருவாக்கப்பட்ட கதைதான் எந்திரனாம்.

சுஜாதாவின் பங்களிப்போடு ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. எந்திரன் படம் வெளியானபோது, ஷங்கர் மீது சென்னை ஐகோர்ட்டில் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தாக்கல் செய்தார்.

ஆரூர் அளித்த புகாரில் கூறியாவை:

‘இனிய உதயம்’ என்ற மாத இதழில், 1996 ஆம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் கதை எழுதினேன். அதில் ராபின் என்ற ஆராய்ச்சியாளர், ‘சூப்பர் பவர் ரோபோட்டை’ உருவாக்குகிறார்.

மனிதனை போல் தோற்றம் அளிக்கும் இந்த ரோபோட் மனிதர்களின் செயல்களில் 95 சதவீதம் செய்யும் திறமை கொண்டது. பின்னர், ‘திக் திக் தீபிகா’ என்ற தலைப்பில் நாவலாகவும் இந்த கதை வெளியானது. இந்த கதையை அப்படியே எந்திரன் என்ற பெயரில் இயக்குநர் சங்கர் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக என்னிடம் எந்த அனுமதியும் அவர் பெறவில்லை.

ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் நான் தான், எந்திரன் படத்தின் கதை உரிமையாளர் என்றும், காப்புரிமை கொண்டவர் என்றும் அறிவிக்க வேண்டும்.

என்னுடைய ‘ஜூகிபா’ கதையை கொண்டு ‘எந்திரன்’ படக்கதையை உருவாக்கியுள்ளதாக அறிவிக்க வேண்டும். எனக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க இயக்குநர் சங்கர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும்.

மனுதாரர் தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய ‘மாஸ்டர்’ கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிவு செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இப்படியொரு உத்தரவை நீதிபதி பிறப்பித்திருப்பதால் ‘எந்திரன்’ கதையின் உரிமையை ஷங்கர் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தக் கதையின் உரிமை ஆரூர் தமிழ்நாடனுக்கு செல்வதோடு, அவர் கோரியபடி ‘எந்திரன்’ கதைக்கு இழப்பீடாக ஒரு கோடியை ஷங்கர் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions