எந்திரன்-2வுக்காக பாலிவுட்டில் வில்லன் தேடும் ஷங்கர்!

Bookmark and Share

எந்திரன்-2வுக்காக பாலிவுட்டில் வில்லன் தேடும் ஷங்கர்!

எந்திரன் படத்தை ரஜினி-ஐஸ்வர்யாராயை வைத்து இயக்கினார் ஷங்கர். ஹாலிவுட் தரத்தில் உருவான அப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தையும் பிரமாண்டமாக இயக்கினார்.

இந்நிலையில், எந்திரன்-2 படத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். தனது பிரமாண்டத்துக்குப்போட்டியாக வருவது போன்று ராஜமவுலியின் பாகுபலி ரூ. 250கோடியில் உருவாகியிருப்பதை அடுத்து, ஷங்கரின் எந்திரன்-2வும் ரூ. 250கோடியில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் பல முக்கிய மொழிகளிலும் அப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், எந்திரன்-2விலும் ரஜினிதான் ஹீரோ என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். ஆனால், வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பதில்தான் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் நீடித்து வருகிறது.

பிரபல நடிகர்கள் இருந்தால்தான் அவ்வளவு செலவு பண்ணி தயாரிக்கும் படத்தை வியாபாரம் செய்ய முடியம் என்பதால் கமல், அமீர்கான் உள்ளிட்ட பலரிடம் கால்சீட் கேட்டார்.

ஆனால் வில்லன் வேடம் என்றதும் அவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். கடைசியாக விக்ரமை நடிக்க வைக்கலாம் என்றால், இந்திய அளவில் அவர் பிரபலம் இல்லை என்பதால் இப்போது அவரை மறந்து விட்டு பாலிவுட்டின் சில பிரபலங்களிடம் கால்சீட் கேட்கிறாராம் ஷங்கர். அப்படி அவர் எதிர்பார்க்கும் இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகர் கிடைத்ததும் எந்திரன்-2 ஸ்டார்ட் ஆகி விடுமாம்.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions