பட்டிமன்றங்களில் பிசியான ஈரோடு மகேஷ்!

Bookmark and Share

பட்டிமன்றங்களில் பிசியான ஈரோடு மகேஷ்!

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் நேயர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஈரோடு மகேஷ். அதன்பிறகு பல சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர், சமீபகாலமாக சினிமாக்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில், சும்மா நச்சுன்னு இருக்கு, கொலை நோக்குப்பார்வை, வேல்முருகன் போர்வெல்ஸ், சிகரம் தொடு என பல படங்களில் காமெடியனாக நடித்தவர், இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.  

இப்படி சினிமா, சின்னத்திரை என்று அவர் பிசியானபோதிலும், பட்டிமன்றங்கள் நடத்துவதையும் தொடர்ந்து வருகிறார். இதற்கு காரணம், சின்னத்திரையில் அவர் முகம் காட்டுவதற்கு முன்பே பட்டிமன்றங்கள் மூலம்தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்தாராம்.

அதனால் இப்போதும் யாராவது பட்டிமன்றம் நடத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கே முதலிடம் கொடுக்கும் ஈரோடு மகேஷ், தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று தற்போது பட்டிமன்றங்கள் நடத்தி வருகிறார்.

தனது பாணியில் எந்தவொரு விசயத்தையும் காமெடி கலந்து சுவைபட அவர் பேசுவதால் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது பேச்சுக்கு ரசிகர்களிடமிருந்து பலத்த கைதட்டல் கிடைக்கிறதாம்.


Post your comment





Related News
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு
நான் பேசுவதை எங்கள் அம்மாவால் கேட்க முடியாது- மகேஷின் மறுப்பக்கம்
பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பாடகி லதா மங்கேஷ்கர்
ருத்ரமாதேவி புரமோஷன் நிகழ்ச்சியில் மகேஷ் பாபு?
இணையத்தைக் கலக்கிய ஸ்ரீமந்துடு பஸ்ட் லுக் போஸ்டர்
தயாரிப்பு நிறுவனம் துவங்கும் மகேஷ் பாபு
விருது நிகழ்ச்சியால் லதா மங்கேஷ்கர் அதிருப்தி
ஹீரோ ஆன நாகேஷ் பேரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions