ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “ பஜிராவ் மஸ்தானி”

Bookmark and Share

ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “ பஜிராவ் மஸ்தானி”

ஈரோஸ் இன்டர்நேஷனல் , பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள பிரம்மாண்டமான படைப்பு “ பஜிராவ் மஸ்தானி”

இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது!! ஈரோஸ் இன்டர்நேஷனல் , பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான படைப்பு “ பஜிராவ் மஸ்தானி”. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் பதினெட்டாம் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கிலும் இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.. தென்னிந்திய ரசிகர்களை கவரும் வகையில் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

தமிழில் பாகுபலி , எந்திரன் ஆகிய பிரம்மாண்டமான படைப்புகளுக்கு  பாடல்கள் மற்றும் வசனம் எழுதிய பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி அவர்கள் இப்படத்தின் தமிழ் பதிப்பிலும் , தெலுங்கு ஸ்ரீமந்துடு மற்றும் பாகுபலி ஆகிய படங்களுக்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுதிய ராமாஜோகையா சாஸ்திரி தெலுங்கு பதிப்பிலும் பணியாற்றியுள்ளனர்.

படம் பல்வேறு மொழிகளில் வெளியாவது குறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேசியது , பஜிராவ் மஸ்தானி நான் பல நாட்களாக சொல்ல நினைத்த கதை. இத்திரைப்படத்தை தென்னிந்தியாவை சேர்ந்த ரசிகர்கள் அவர்களுடைய சொந்த மொழியில் பார்க்க இருக்கிறார்கள். இத்திரைப்படம் என்னுடைய பலநாள் கனவு , நான் இந்த கனவோடு பலநாட்கள் வாழ்ந்திருக்கிறேன்.

மொழிகளை கடந்து என்னை போல் ரசிகர்களும் இந்த கனவோடு வாழவேண்டும் என்று கூறினார். இதை பற்றி ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் முத்த துணை தலைவர் நந்து அகுஜா பேசியது , தென்னிந்திய சந்தையில்  இதே கதையம்சத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது , இது தான் பஜிராவ் மஸ்தானி திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்ய வைத்தது .

பஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. பஜிராவ் மஸ்தானி இந்தியாவில் இருந்து வெளிவரும் உலகளாவிய திரைப்படமாக இருக்கும்.

மிகச்சிறந்த கிளாசிக் திரைப்படங்களை எடுத்து பத்மஸ்ரீ விருது பெற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இத்திரைப்படத்தை நுணுக்கமான கதை கரு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களோடு சேர்த்து மிகச்சிறந்த முறையில் உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். பஜிரோ மஸ்தானி ஒரு படைப்பாளியின் வெகுநாள்  கனவு நீண்ட நாட்களுக்கு பின் நினைவாதை பற்றியது.

இத்திரைப்படம் ரசிகர்களை காதல், தேசம் , போர் , செழுமை போன்ற பல்வேறு இடங்களுக்கு கடத்தி செல்லவல்லது . ஈரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் பஜிராவ் மஸ்தானி வருகிற டிசம்பர் பதினெட்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
அடங்காத சமூக வலைஞர்கள்... அட, விட்ருங்கப்பா விஷாலை!
விஜய் மீடியாவை அழைத்தாரா? என்னதான் நடந்தது?
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது
தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் சங்கத்திற்கு 6-வது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு!
தற்கொலை செய்து கொண்ட மற்றொரு சின்னத்திரை பிரபலம் – அதிர்ச்சியில் திரையுலகம்!
“கலாம் விருதுகள்” அறிமுக விழா
சென்னையில் சர்வதேச குறும்பட விழா: ஆயிரம் படங்கள் திரையீடு
ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா
மீண்டும் படம் தயாரிக்கும் பெரோஸ்கான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions