படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கே கதை சொன்ன எஸ்தர்!

Bookmark and Share

படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கே கதை சொன்ன எஸ்தர்!

பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் என்ற கேரக்டரில் நடிக்கிறார் கமல். த்ரிஷ்யம் மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் அதே கதையில் அப்படியே நடித்தால் புதிதாக தான் எதையும் செய்ய முடியாது என்பதற்காக திருநெல்வேலியில் நடப்பது போன்று அந்த கதைக்களத்தை மாற்ற வைத்திருக்கிறார் கமல்.

அதோடு, இந்த படத்தில் திருநெல்வேலிக்காரராக டோட்டலாக மாறி விட வேண்டும் என்பதற்காக, படத்துக்கு வசனம் எழுதிய ஜெயமோகன், சுகா ஆகியோரிடம் திருநெல்வேலி மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்புகளை பயிற்சி எடுத்து நடித்த கமல், அங்குள்ள மக்கள் வேஷ்டி, லுங்கி கட்டுவது போன்று தானும் கட்டிக்கொண்டு நடித்திருக்கிறார். அந்த வகையில், முழுமையான சுயம்புலிங்கமாக மாறியிருக்கிறார் கமல்.

மேலும், இந்த படத்தில் கமலின் முதல் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க, இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருக்கிறார். இவர் மலையாள திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்தவர். அதையடுத்து, அதே படம் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக்கான போதும் நடித்தவர், இப்போது தமிழிலும் அதே வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதனால், ஏற்கனவே அவருக்கு நல்ல பயிற்சி இருந்ததால் முந்தைய படங்களை விடவும் இந்த பாபநாசம் படத்தில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறாராம் எஸ்தர்.

அதோடு, படத்தின் கதை மற்றவர்களை விட அவருக்கே நன்றாக தெரியும் என்பதால், படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருக்கும்போது அடுத்த காட்சி என்ன வரும்.

அதில் மற்ற மொழிகளில் யார் யாரெல்லாம் எப்படி எப்படி நடித்தார்கள் என்பதையும் கமலிடம் அவ்வப்போது சொல்லிக்கொண்டேயிருப்பாராம். அதனால் பாபநாசம் படத்தில் நடித்தபோது ஓய்வாக இருக்கும்போது எஸ்தர் சொன்ன கதையையும் காது கொடுத்து கேட்டு மகிழ்ந்தாராம் கமல்.


Post your comment





Related News
நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்
பாகுபலி டீமுடன் முதல்வன் இரண்டாம் பாகம் ரெடி- ஆனால் இயக்குனர் ஷங்கர் இல்லையா?
ஓடும் ரெயிலில் அனில் கபூர் சாகசம் செய்ததால் சர்ச்சை!
மகாடாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அனில் கபூருக்கு நோட்டீஸ்!
நடிகர்கள் ஜீதேந்திரா, அனில்கபூருக்கு மராட்டிய அரசு விருது!
ஒரே கேரக்டர், 3 மொழிகள் அசத்தும் எஸ்தர்
தில் தடக்னே தோ ரூ. 37 கோடி வசூல்
என் வீடே பிரியங்காவின் வீடு : அனில் கபூர்
நாயகனுக்கு \'கண்டம்\' ஆன விளம்பரம்
அனில் கபூரின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions