ஒரே கேரக்டர், 3 மொழிகள் அசத்தும் எஸ்தர்

Bookmark and Share

ஒரே கேரக்டர், 3 மொழிகள் அசத்தும் எஸ்தர்

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் கடைசி மகளாக நடித்தவர் எஸ்தர். தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷின் கடைசி மகளாக நடித்தார், தற்போது தமிழ் ரீமேக் பாபநாசத்தில் கமலின் கடைசி மகளாக நடித்திருக்கிறார். கதையின் திருப்பு முனை கேரக்டரில் நடித்திருக்கும் எஸ்தர் இப்போது பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ள சைல்டு ஆர்ட்டிஸ்ட் எஸ்தர். 20 படங்களுக்குமேல் நடித்துள்ளார். தற்போது 9வது வகுப்பு படித்து வருகிறார். "மோகன்லால் அங்கிள் நன்றாக நடித்தால் கைதட்டி பாராட்டுவார், வெங்கடேஷ் அங்கிள் தெலுங்கு சொல்லிக் கொடுத்தார், கமல் அங்கிள் ரொம்ப பிரண்ட்லி, நன்றாக நடித்தால் சாக்லெட், ஐஸ்கிரீம் ரொம்ப கிடைக்கும்" என தன் நடிப்பு அனுபவங்களைச் சொல்கிறார். 

"நடிப்பும் முக்கியம், படிப்பும் முக்கியம், படிப்பு கெடாம நடிப்பேன். பிளஸ்-2 முடிச்சிட்டு ஹீரோயினா நடிப்பேன். டான்சுல ஷோபனா சேச்சியும், நடிப்புல நயன்தாரா சேச்சியும் ரோல் மாடல்" என்கிறார் எஸ்தர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions