27ந் தேதி ரிலீசாகிறது எட்டுத்திக்கும் மதயானை

Bookmark and Share

27ந் தேதி ரிலீசாகிறது எட்டுத்திக்கும் மதயானை

ஆர்யாவின் தம்பி சத்யா, புதுமுகம் ஸ்ரீமுகி நடித்துள்ள படம் எட்டுத்திக்கும் மதயானை. ராட்டினம் தங்கசாமி இயக்கி உள்ளார். மனு ரம்பீசன் இசை அமைத்துள்ளார், ஆர்.ஜே.ஜெய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் தங்கசாமியின் சொந்த தயாரிப்பு. 2 வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வருகிற 27ந் தேதி வெளிவருகிறது. படம் தயாரிப்பில் இருந்தபோது அமரகாவியம் படம் கமிட்டானதால் இதை விட்டுவிட்டு அந்தப் படத்திற்கு போய்விட்டார் சத்யா.

இதனால் தங்கசாமி படத்தை முடிக்க முடியாமல் தவித்தார். அமரகாவியம் தோல்வி அடையவே மீண்டும் மதயானைக்கு திரும்பி வந்தார். அதன் பிறகு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.

ராட்டினம் வெற்றி பெற்றாலும் அடுத்த வாய்ப்புக்கு ஏங்கிய தங்கசாமி அது கிடைக்காதால் தானே சொந்தமாக தயாரித்தார். முதல் படம் படித்துறை வெளிவரவில்லை.  புத்தகம், அமரகாவியம் ஓடவில்லை. எனவே சத்யா, தங்கசாமி இருவருக்குமே இது முக்கியமான படம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions