தமிழ் முகத்திற்காக ஐரினுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குனர்!

Bookmark and Share

தமிழ் முகத்திற்காக ஐரினுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குனர்!

உதயா ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் வெள்ளை உலகம். ரோஷன்-ஐரின் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் ஜாதி ரீதியான காதல் பிரச்சினையை படமாக்கியிருக்கிறார். இதில் கிராமத்து பெண்ணாக நடிக்க பல அண்டை மாநில நடிகைகளை அழைத்து ஆடிசன் நடத்திய உதயா ராமகிருஷ்ணன் எந்த நடிகையின் முகத்தோற்றமும் சரியாக வராததால் கடைசியில் ஒரு தமிழ் நடிகைதான் இந்த வேடத்தில் நடிக்க சரியாக இருப்பார் என்று தமிழ் நடிகை ஐரினை புக் பண்ணியிருக்கிறார்.

இதுபற்றி நடிகை ஐரின் கூறும்போது, சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டு நடிகைகளுக்கு வரவேற்பே இல்லை. தமிழ் நடிகை என்றதுமே முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்த வெள்ளை உலகம் படத்தின் டைரக்டர் உதயா ராமகிருஷ்ணனோ நான் தமிழ் முகம் கொண்ட நடிகை என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் எனக்கு இந்த படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார்.

 மேலும், நான் பல கம்பெனிகளில் வாய்ப்புக்கேட்டு ஏறி இறங்கிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு நடிகைகள் இறங்கி வந்து நடிக்க மாட்டார்கள். எடுத்ததற்கெல்லாம் கண்டிசன் போடுவார்கள் என்ற குற்றச்சாட்டும் என் காதில் விழுந்தது.

ஆடை குறைப்பு, முத்தக்காட்சி என்றெல்லாம் நடிக்க மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். அதன்பிறகுதான் சினிமாவில் நடிக்க வந்த பிறகு ஓரளவு காலத்திற்கேற்ற நடிகையாக இருக்க வேண்டும் என்று தற்போது கதைக்கு தேவையான நடிகையாக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்.

அதேசமயம், தமிழ் நடிகைகளுக்கென்று ஒரு வட்டம் உள்ளது. அதை மீற மாட்டேன் என்று கூறும் ஐரின், பெரிய நடிகையாக வேண்டும் என்பதைவிட நல்ல நடிகையாக சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions