அஜித்துக்கு குரல் போகும் அபாயத்தில் பிரபல இயக்குனரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

அஜித்துக்கு குரல் போகும் அபாயத்தில் பிரபல இயக்குனரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற படங்களை இயக்கியவர் எழில். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து சரவணன் இருக்க பயமேன் படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தின் ப்ரொமோஷனில் பேசிய அவர்,

" பூவெல்லாம் உன் வாசம் கதையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் அஜித்திடம் சென்று சொல்ல சொன்னார். அப்போது அஜித் அப்போலோ மருத்துவமணையில் தொண்டை ஆப்ரேஷனில் இருந்தார். ஆப்ரேஷன் செய்தால் குரல் மீண்டும் வருமா வராதா என்கிற அபாய நிலையில்தான் அவர் இருந்தார்.

எனினும் அடுத்த வாரம் வந்திடுவேன் படம் பண்ணலாம் என தைரியமாக என்னிடம் சொல்லி சென்றார். சொன்னது போலவே வந்தார்" என அஜித் பற்றிய ரகசியத்தை சொன்னார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions