பிரச்னையை முடிக்க பஹத் பாசிலிடம் 75 லட்சம் கேட்ட தயாரிப்பாளர்..!

Bookmark and Share

பிரச்னையை முடிக்க பஹத் பாசிலிடம் 75 லட்சம் கேட்ட தயாரிப்பாளர்..!

சமீபத்தில் மலையாள சினிமா தயாரிப்பாளர் அரோமா மணி, தனது படத்தில் இருந்து பஹத் பாசில் விலகிக்கொண்டதாகவும், வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி தரவில்லையென்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

விசாரித்ததில் 2012ல் அரோமா மணியின் தயாரிப்பில் நடிக்க பஹத் பாசில் ஒப்புக்கொண்டதாகவும், கதை திருப்தி இல்லாததால் அப்போதைக்கு அதை கிடப்பில் போட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

அதேசமயம் நல்ல கதை அமைந்தால் வேறு ஒரு படம் நடித்து தருகிறேன் என பஹத் சொன்னதாகவும் தெரிகிறது. ஆனால் இதுவரை இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் கதை அமையவே இல்லை.

எனவே அரோமா மணி இதுகுறித்து ஏற்கனவே பஹத் பாசில் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் அதை நினைவூட்டி பஹத் பாசில் தனது படத்தில் நடிக்காவிட்டால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய 75 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கமோ, 75 லட்சம் என்பது மிக அதிகமான தொகை என்றும் நியாயப்படி 15 லட்சம் கேட்கலாம் என அறிவுறுத்தியதோடு, இந்தப்பிரச்சனையை மலையாள நடிகர் சங்கத்திற்கு திருப்பிவிட்டது.

நடிகர் சங்கமும் இதனை ஆய்வு செய்துவிட்டு பஹத் பாசிலை அழைத்து சீக்கிரம் இந்த பிரச்சனையை செட்டில் செய்யுமாறு கூறியதோடு, 75 லட்சம் நஷ்ட ஈடு கேட்டதற்காக தயாரிப்பாளர் அரோமா மணியின் செயலை கண்டித்தும் உள்ளது.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions