விளம்பரப்படங்களை இயக்கும் பஹத் பாசில்...!

Bookmark and Share

விளம்பரப்படங்களை இயக்கும் பஹத் பாசில்...!

மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசிலை பொறுத்தவரை கோட் சூட் போட்டுக்கொண்டு 'இம்மானுவேல்', 'பெங்களூர் டேய்ஸ்' படங்களில் நடித்தது போல ஹைடெக்காகவும் நடிப்பார்.. 'மரியம் முக்கு' படத்தில் நடித்தமாதிரி லுங்கியை மடித்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச்செல்லும் மீனவனாகவும் நடிப்பார்.

அவருக்கு தேவை மக்கள் தன்னை ரசிக்கிறார்களா, படம் வெற்றியடைகிறதா என்பதுதானே தவிர கெட்டப்பை பற்றி அவர் அலட்டிக்கொள்வதே இல்லை. இப்போது, தான் நடிக்கவிருக்கும் 'நாளே' (நாளை) படத்திற்காக மீண்டும் ஒயிட் காலர் ஜாப் ரோலில் விளம்பர படங்களை இயக்குபவராக மாறியிருக்கிறார்.

அவரது அசிஸ்டென்ட்டாகவும் காதலியாகவும் நடிக்கிறார் மாளவிகா மோகன். எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய நிறுவனத்திற்கு விளம்பரப்படம் எடுத்து தரும் வாய்ப்பு பஹத்துக்கு கிடைக்கிறது.. அது எப்படியெல்லாம் அவரது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை ரொமாண்டிக் த்ரில்லராக சொல்ல இருக்கிறார்களாம்.

இது கிட்டத்தட்ட என்றென்றும் புன்னகை ஜீவா-த்ரிஷா கதை மாதிரியே இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.. மேமாதம் படத்தை ரிலீஸ் பண்ணுகிறார்களாம்... அப்போது பார்ப்போம் அங்கே என்ன சொல்லவருகிறார்கள் என்று...


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions