மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தவர் பஹத் பாசில் தான்..!

Bookmark and Share

மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தவர் பஹத் பாசில் தான்..!

இயக்குனர் மணிரத்னம் ஹீரோவுக்காக கதை எழுதுபவர் அல்ல.. கதையை தயார்செய்துவிட்டு அதற்கு பொருத்தமான ஹீரோவை தேடுபவர். அதனால் தான் அரவிந்த் சாமியை வைத்து நான்கைந்து படங்கள் எடுக்க முடிந்த அவரால் கமலுடனும், ரஜினியுடன் ஒரு படத்திற்கு மேல் பணிபுரிய முடியவில்லை..

அவ்வளவு ஏன் இன்னும் அஜித், விஜய்யை வைத்து கூட படம் பண்ணவே இல்லையே.. அந்த மாதிரித்தான் தற்போது அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள 'ஓ காதல் கண்மணி' படத்தின் கதையை எழுதி முடித்ததும், முதலில் அவர் மனதில் பளிச்சென்று தோன்றியவர் மலையாள இளம் முன்னணி நடிகரான பஹத் பாசில் தான்.. ஆனால் பஹத் பாசிலுக்கு தமிழுக்கு வருவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை.

காரணம் தலையில் பாதி முடிகொட்டிப்போன நிலையில் இருக்கும் அவரை தமிழ் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற அச்சம் தான். அதை தொடர்ந்து ராம்சரண் தான் மணிரத்னத்தின் அடுத்த சாய்ஸாக இருந்தார். ஆனால் படத்தின் தயாரிப்பளார்களுக்கோ 'அதுக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்' என்றே தோன்றியதால் ராம்சரணுக்கு அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. மூன்றாவது சாய்ஸ் தான் துல்கர் சல்மான்.

துல்கரை பொறுத்தவரையில் தன் தந்தை மம்முட்டியைப்போல, தானும் தமிழில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என நினைப்பவர்.. 'தளபதி' மூலம் தன் தந்தைக்கு தமிழில் வழிபோட்டுத்தந்த மணிரத்னம், தனக்கும் ஒரு நல்ல வழி காட்டுவார் என நம்பி ஏப்ரல்-2ஆம் தேதி 'ஓ காதல் கண்மணி' மூலம் திரைக்கு வருகிறார் துல்கர் சல்மான்.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions