ஐந்து படங்களின் அட்வான்ஸை திருப்பி கொடுத்து பஹத் பாசில் அதிரடி..!

Bookmark and Share

ஐந்து படங்களின் அட்வான்ஸை திருப்பி கொடுத்து பஹத் பாசில் அதிரடி..!

பஹத் பாசிலின் செயல் மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது பொய்யில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து படங்களின் அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்திருக்கிறார் இளம் முன்னணி ஹீரோ பஹத் பாசில்..

காரணம் கடந்த வருடத்தில் பஹத் பாசில் நடித்து வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பப்படம் ஆனதுதான்.. அதில் ஒரே ஒரு படம் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது 'பெங்களூர் டேய்ஸ்' மட்டும் தான்.

ஆனால் அதுகூட துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்கும் சேர்த்து கிடைத்த கூட்டணி வெற்றி தானே..? இந்த வருடத்தில் இதுவரை அவர் நடித்து வெளியான மரியம் முக்கு, தரம் ஆகிய இரண்டு படங்களும் அவர் முகத்தில் சிரிப்பை வரவழைக்கவில்லை என்பதே உண்மை.

சமீபத்தில் தயாரிப்பாளர் அரோமா மணி, தனது படத்தில் இருந்து பஹத் பாசில் விலகிக்கொண்டதாகவும், வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி தரவில்லையென்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் விசாரித்தபோது பஹத் பாசில், தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் காமா சோமா வென்று நடிக்க விரும்பாமல், தனக்கு செட்டாகாத சிலவற்றை களையெடுக்கும் விதமாகத்தான் தயாரிப்பாளர் அரோமா மணியின் படம் உட்பட ஐந்து படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்துள்ளார்.

குறிப்பாக தனது முந்தைய தோல்விகளின் மீது அவநம்பிக்கை வைத்து, புறம் பேசி வருபவர்களின் படங்களைத்தான் ஓரங்கட்டி வருகிறாராம் பஹத் பாசில்..


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions