பஹத் பாசிலை ரட்சிக்க வந்த ரட்சகன்...!

Bookmark and Share

பஹத் பாசிலை ரட்சிக்க வந்த ரட்சகன்...!

கடந்த வருடத்தில் பஹத் பாசில் நடித்து வெளியான படங்கள் ஐந்து. அதில் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் 'பெங்களூர் டேய்ஸ்' மட்டும் தான். ஆனால் என்ன பிரயோஜனம்..? அது துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்கும் சேர்த்து கிடைத்த கூட்டணி வெற்றி தானே..?

2013ல் பஹத் சோலோ ஹீரோவாக நடித்த, 'அன்னயும் ரசூலும்' படத்திற்கு கிடைத்த வெற்றிபோல தனி வெற்றி அல்லவே.. பஹத் முதன்முதலில் போலீஸாக நடித்து, அவர் மிகவும் எதிர்பார்த்த 'ஒன் பை ட்டூ' படம் கூட அவரை ஏமாற்றத்தானே செய்தது..

சரி, போனது போகட்டும்.. இனிமேல் அந்த வருத்தத்தை எல்லாம் மறந்துவிடலாம்.. காரணம் அவரை ரட்சிக்கும் ரட்சகர் கிடைத்து விட்டார். அவர் வேறு யாருமல்ல, மலையாள ஆக்சன் படங்களின் பிதாமகனான டைரக்டர் ஜோஷி தான்..

ஆம்.. ஜோஷியின் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் பஹத் பாசில்.. அதனால் படம் ஹிட் என்பதை இப்போதே எழுதி வைத்துவிடலாம். காரணம் ஜோஷியின் வெற்றி சரித்திரத்தை ஒருமுறை புரட்டிப்பார்த்தாலே விளங்கிவிடும்.

அதுமட்டுமல்ல, இதுவரை சத்யன் அந்திக்காடு தவிர பிரபல சீனியர் இயக்குனர்களின் படங்களில் நடித்திராத பஹத் பாசிலை ஜோஷி வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்வார் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions