'லார்ட் லிவிங்ஸ்டோன் 7 கண்டி'ன்னு சொன்னா உங்களுக்கு ஏதாவது புரியுதா..?

Bookmark and Share

'லார்ட் லிவிங்ஸ்டோன் 7 கண்டி'ன்னு சொன்னா உங்களுக்கு ஏதாவது புரியுதா..?

குழப்பமே வேண்டாம்.. மேலே சொன்னது ஒரு படத்தின் தலைப்புதான். இப்படி டைட்டிலிலேயே குழப்பத்தை உண்டுபண்ணி, அதன்மூலம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் (அப்பா இவர் பெயர் மாதிரி தான் டைட்டிலும் நீளம், நீளமா இருக்குது) புது ரூட்டை கையாளுபவர்.  

இவர் இதற்கு முன்னர் இயக்கிய 'நார்த் 24 காதம்', மற்றும் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' ஆகிய படங்களிலும் இதே டெக்னிக்கை கையாண்டு இருந்தார். இன்னும் டைட்டில் வைத்ததன் காரணத்தை அவர் வெளியில் சொல்லவே இல்லை.

பஹத் பாசில் ஹீரோவாக நடித்த 'நார்த் 24 காதம்' படத்தில் பந்த் நடக்கும் ஒரு நாளில் சூழ்நிலையால் ஒன்றாக சந்திக்கும் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்ட நபர்கள், தங்களது ஊருக்கு செல்வதற்காக அடைகின்ற சிரமங்களையும், அதனூடாக ஒரு காதலையும், காதல் சீரியஸான ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதையும் புதிய கோணத்தில் சொல்லியிருந்தார்.  

அதேபோல பிருத்விராஜ் நடித்த 'சப்தமஸ்ரீ தஸ்கரா'வில் ஜெயிலில் சந்திக்கும் ஆறு குற்றவாளிகள் ரிலீசானபின்னர் வெளியே சென்று கொள்ளையடிக்க திட்டம் போடுவதையும், அதை எக்ஸிகியூட் பண்ணும்போது ஏற்படும் நிகழ்வுகளையும் காமெடி கலந்த த்ரில்லராக படமாக்கி, க்ளைமாக்ஸில் படு சூப்பரான ட்விஸ்ட் ஒன்றையும் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்தார்.

இந்த இரண்டு படங்களில் இவர் காட்டிய ஸ்டைல் தான் இப்போது அவரின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்பிற்கு இப்போது அவர் வைத்திருக்கும் டைட்டிலே தூபம் போட்டுள்ளது.  ஏப்ரலில் துவங்கப்பட உள்ள இந்தப்படத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்கலாம் என தெரிகிறது. 


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions