சீரியஸ் முகமூடியை கழட்டிவிட்டு காமெடிக்கு மாறுகிறார் பஹத் பாசில்..!

Bookmark and Share

சீரியஸ் முகமூடியை கழட்டிவிட்டு காமெடிக்கு மாறுகிறார் பஹத் பாசில்..!

மலையாள இளம் முன்னணி நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதனால் அவரையும் மீறி பெரும்பாலான அவரது படங்களில் அவரது கேரக்டர் சீரியஸாகவே அமைந்திருக்கும்.

ஆனால் அவர் சீரியஸாக செய்யும் விஷயங்கள் ஆடியன்ஸுக்கு காமெடியாக இருக்கும், உதாரணத்திற்கு அவர் நடித்த நார்த் 24 காதம், பெங்களூர் டேய்ஸ் ஆகிய படங்களை சொல்லலாம்.

ஆனால் இப்போது தனது சீரியஸ் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு முதல் முதலாக 'போர்பன் ஸ்ட்ரீட்' என்கிற படத்தில் முழுக்க காமெடி கலந்த கேரக்டராக நடிக்க உள்ளார்.

அதற்கேற்ற ஸ்கிரிப்ட்டை பக்காவாக தாயார் செய்துள்ளார் இயக்குனர் அபி வர்கீஸ். இவர் ஏற்கனவே இயக்கிய 'அக்கர காழ்ச்சகள்' படத்தை பார்த்தவர்களுக்கு இவர் பஹத் பாசிலை காமெடி ரோலில் ஜொலிக்க வைப்பார் என சத்தியம் செய்யாமலேயே நம்புவார்கள்.

அதுமட்டுமல்ல படத்தின் வசனங்களை எழுதுபவர்கள் யார் தெரியுமா..?  ஏற்கனவே 'ஏபிசிடி' படத்தில் துல்கர் சல்மான்- ஜேக்கப் கிரிகரி கூட்டணிக்காக எழுதிய காமெடி வசனங்களில் பட்டையை கிளப்பியவர்கள் தான்.

இந்தப்படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த லூகாஸ் பிரச்னிக் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி உட்பட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார்.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions