டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?

Bookmark and Share

டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?

மலையாள சினிமாவில் வித்தியாசமான நடிப்பால் கலக்கிவரும் பஹத் பாசில் அடுத்ததாக நடித்துவரும் படத்தின் பெயர் ஆயாள் ஞானல்ல. அதாவது நான் அவனில்லை என அர்த்தம். வழக்கம்போல இதுவும் பஹத் பாசில் நடிக்கும் ஒரு படம் என்கிற மாதிரி சாதாரணமாக இதை நினைத்துவிட முடியாது.

காரணம் முதன்முதலாக பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுவரை தனது ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுடன்(!) நடித்துவந்த பஹத் பாசில் இந்தப்படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காக முதன்முறையாக விக் வைத்து நடிக்கிறார்.  

பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். டபுள் ஆக்சன் படங்களில் ஆள் மாறாட்டம் செய்யும் காமெடி கதைகளும் உண்டு, திருடன் போலீஸ் கதைகளும் உண்டு.. ஆனால் பகத் பாசிலின் முதல் டபுள் ஆக்சன் படம் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் காமெடியை டிக் செய்துள்ளார் ரஞ்சித்.

நடிகராக இருந்த வினீத்குமார் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மிருதுளா முரளி.. மோகன்லாலின் ரெட் சில்லீஸ் படத்தில் அறிமுகமான இவர் தமிழில் மனிவண்ணன் இயக்கிய நாகராஜசோழன் படத்திலும் நடித்துள்ளார். 


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions