“பஹத் பாசிலுடன் நடிக்கும் கனவு நனவானது” - ஐஸ்வர்யா மேனன்..!

Bookmark and Share

“பஹத் பாசிலுடன் நடிக்கும் கனவு நனவானது” - ஐஸ்வர்யா மேனன்..!

காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலைசெய்யணும் குமாரு ஆகிய படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் பக்கம் இப்போது அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்துள்ளது.

அதன் பிரதிபலிப்புதான் தற்போது பஹத் பாசில் ஜோடியாக 'போர்பன் ஸ்ட்ரீட்' என்கிற படத்தில் மெயின் ஹீரோயினாக அவர் நடித்துவருவதும். முதல் முதலாக இந்தப்படத்தில் முழுக்க காமெடி கலந்த கேரக்டரில் நடிக்க உள்ளார் பஹத் பாசில்.

அதற்கேற்ற ஸ்கிரிப்ட்டை பக்காவாக தயார் செய்துள்ளார் இயக்குனர் அபி வர்கீஸ். “பஹத் பாசிலுடன் நடிக்க வேண்டும் என்கிற என் கனவு இவ்வளவு சீக்கிரம் நனவாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.

எனது சொந்த ஊரில் இப்படி ஒரு பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி” என உருகுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இந்தப்படத்தில் பிராக்டிகலான, சுதந்திரமான மனப்போக்குடைய ரேகா என்கிற இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன், படத்தில் லைவ் ரெக்கார்டிங் என்பதால் வசனங்களை கவனமாக பேசியுள்ளாராம்  இதுதவிர கன்னடத்தில் ரீமேக்காகியுள்ள 'யாமிருக்க பயமே' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ள இவர் தமிழிலும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions