பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!

Bookmark and Share

பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!

கடந்த ஜனவரியில் வெளியான 'மரியம் முக்கு' படத்தில் நடித்த மாதிரி லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு மீனவனாக நடித்து அசரவைத்தத பஹத் பாசில், இப்போது, தான் நடிக்கும்  'நாளே' (நாளை) படத்திற்காக மீண்டும் ஒயிட் காலர் ஜாப் ரோலில் விளம்பர படங்களை இயக்குபவராக மாறியிருக்கிறார்.

எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய நிறுவனத்திற்கு விளம்பரப்படம் எடுத்து தரும் வாய்ப்பு பஹத்துக்கு கிடைக்கிறது.. அது எப்படியெல்லாம் அவரது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை ரொமாண்டிக் த்ரில்லராக சொல்ல இருக்கிறார்களாம்.

பஹத் பாசிலின் அசிஸ்டென்ட்டாகவும் காதலியாகவும் நடிக்கிறார் மாளவிகா மோகன். ஆனாலும் இவர் தவிர படத்தில் இன்னொரு கதாநாயகியாக இஷா தல்வாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 'காட்ஸ் ஓன் கண்ட்ரி' படத்தில் பஹத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் இஷா தல்வார். இந்தப்படத்தில் இஷாவுக்கு மாடர்ன் கேர்ள் கேரக்டராம். ரொமாண்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப்படத்தை ஷிஜு பாவா என்பவர் இயக்குகிறார்.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
முத்தக் காட்சியில் நடிப்பது தவறு அல்ல: இஷா தல்வார் பேட்டி
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions