பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?

Bookmark and Share

பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?

படங்களை சரியாக தேர்ந்தெடுக்க தெரியவில்லையா..? இல்லை.. வரும் படங்களை எல்லாம் ஒத்துக்கொண்டு கதையை பற்றி கவலைப்படாமல் கல்லாவை மட்டும் நிரப்புவது தான் குறிக்கோளா..? இப்படி எல்லாம் சொல்லி நடிகர் பஹத் பாசிலை எந்த வட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாது என்றால், அப்புறம் என்னதான் ஆச்சு அவருக்கு..? கடந்த வருடத்தில் பெங்களூர் டேய்ஸ் மட்டுமே இவருக்கு ஆறுதல் வெற்றி.

அதுகூட இன்னும் சில ஹீரோக்கள் ஒன்று சேர்ந்த கூட்டணி வெற்றி தான். சரி பஹத் பாசில் இனி என்ன செய்யபோகிறார்..? ஏற்கனவே மீடியாவுக்கும் அவருக்கும் ரொம்பவே தூரம். பேட்டி கொடுப்பதென்றால் அவருக்கு வேப்பங்காயாக கசக்கும். அதனால் பரபரப்பான செய்திகளில் அவர் இடம் பெறுவதே இல்லை.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் வளர்ந்து வந்த வேகத்தை பார்த்து அவரை வசூல் சக்கரவர்த்தி என அழைத்த மலையாள சினிமா இப்போது அவரை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்ளும் சூழல்.

இந்த சூழழில் தான் தற்போது, நாளே என்கிற படத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் பஹத் பாசில். அது மட்டுமல்ல,  பீமேல் கோட்டயம் படத்தின் மூலம் பஹத் பாசிலை முன்னணி ஹீரோவாக்கிய இயக்குனர் ஆசிக் அபு, மீண்டும் அவரை கை தூக்கி விடும் விதமாக இயக்குனர் திலீஷ் போத்தனை வைத்து மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இனி வரும் நாட்களில் பஹத் பாசில் சுதாரிப்பாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions