பஹத் பாசில் படத்தின் டைட்டில் மாறியது...!

Bookmark and Share

பஹத் பாசில் படத்தின் டைட்டில் மாறியது...!

நீண்ட நாட்களாக தான் அணிந்துவந்த சீரியஸ் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு முதல் முதலாக போர்பன் ஸ்ட்ரீட் என்கிற படத்தில் முழுக்க காமெடி கலந்த கேரக்டராக நடித்து வருகிறார்.

அதற்கேற்ற ஸ்கிரிப்ட்டை பக்காவாக தயார் செய்துள்ளார் இயக்குனர் அபி வர்கீஸ். இவர் ஏற்கனவே அக்கர காழ்ச்சகள் என்கிற காமெடி படத்தை இயக்கியவர் தான்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடந்து வரும் நேரத்தில் இந்தப்படத்தின் டைட்டிலை ஞான் டி.பி.பள்ளிக்கல் என மாற்றியுள்ளார்கள். 


ஏற்கனவே ஏபிசிடி படத்தில் துல்கர் சல்மான் - ஜேக்கப் கிரிகரி கூட்டணிக்காக எழுதிய காமெடி வசனங்களில் பட்டையை கிளப்பியவர்கள் தான் இந்தப்படத்திற்கும் வசனம் எழுதுகிறார்கள் என்பது கூடுதல் பலம். அத்துடன் காமெடி நடிகர் ஜேக்கப் கிரிகரியும் நடிக்கிறார்.

பஹத் பாசிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த லூகாஸ் பிரச்னிக் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions