வசூல் வரலாற்றில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் புதிய சாதனை- இந்தியாவில் இரண்டே நாளில் ரூ.24.30 கோடி குவித்தது

Bookmark and Share

வசூல் வரலாற்றில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் புதிய சாதனை- இந்தியாவில் இரண்டே நாளில் ரூ.24.30 கோடி குவித்தது

உலகம் முழுவதும் 10 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட 'பாஸ்ட் அன்ட் பியூரியஸ்- 7’ திரைப்படம் இதுவரை 240.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை குவித்துள்ளது. அமெரிக்காவில் 143.6 மில்லியன் டாலரை அள்ளியுள்ளது.

இந்தியாவில் மட்டும் 2 ஆயிரத்து 300 தியேட்டர்களில் திரையிடப்பட்டு கடந்த இரண்டு நாட்களில் 24.30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், வார இறுதிக்குள் இந்த தொகை 45 கோடி ரூபாயை எட்டிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அபார வசூல் சாதனையின் பின்னணியில் இப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ள மறைந்த பால் வாக்கர் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன. 30-11-2013 அன்று நடைபெற்ற ஒரு கார் விபத்தில் பலியான பால் வாக்கர் நடித்த கடைசி படம் இது என்பதால் அவரை பெரிய திரையில் காண குவியும் ரசிகர்களின் படையெடுப்பும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அவ்வகையில், இந்தியாவில் இதுவரை திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்த அத்தனை ஹாலிவுட் படங்களின் முந்தைய சாதனைகளையும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் நிச்சயமாக முறியடித்துவிடும் என சினிமா வினியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions