இந்தியாவில் 100 கோடிகளை கடந்த பியூரியஸ் 7

Bookmark and Share

இந்தியாவில் 100 கோடிகளை கடந்த பியூரியஸ் 7

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் சீரிஸ் படத்துக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்றாலும், அதன் ஏழாவது பாகமான பியூரியஸ் 7 கொஞ்சம் ஸ்பெஷல். முக்கியமான இந்த சீரிஸில் கலக்கிய பால் வாக்கர் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இறந்தார்.

 பியூரியஸ் 7 படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான். சென்ற வருடம் ஹாலிவுட்டை கலக்கிய பேய் படமான, த கான்ஜுரிங்கை இயக்கியவர்.  இந்தியாவில் இப்படம் 2,800 திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 2டி, 3டி மற்றும் ஐ மேக்ஸ் வடிவங்களில் வெளியானது.

முதல் வாரத்திலேயே இப்படம் இந்தியாவில் 100 கோடிகளை கடந்து வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஹாலிவுட் படமும் இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியானதும் இல்லை, இப்படியொரு அதிரடி வசூலை பெற்றதுமில்லை. 

வின் டீசல், பால் வாக்கர், ஜாஸன் ஸ்டெதம், டௌவ்னி ஜான்சன் ஆகிய ஆக்ஷன் ஹீரோவுக்களுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருப்பதும், இந்த அபார வசூலுக்கு ஒரு காரணம்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions