6 ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளிய பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்: அடுத்த பாகத்திற்கு ரிலீஸ் டேட் அறிவித்த வின் டீசல்

Bookmark and Share

6 ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளிய பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்: அடுத்த பாகத்திற்கு ரிலீஸ் டேட் அறிவித்த வின் டீசல்

இந்த தொடரின் கடைசிப் படம் இதுதான் என்று அறியப்பட்ட ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7’ உலகமெங்கும் ரிலீசாகி 6 ஆயிரத்து 329 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 8’ வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களைத் தயாரிக்கும் அதி பிரம்மாண்டமான யுனிவர்சல் ஸ்டூடியோஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள ‘சீசர்’ அரண்மனையில் ‘சினிமா கான் 2015’ என்ற விழாவினை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ‘வின் டீசல்’ இதுவரை நீங்கள் பார்த்திருக்காத வகையில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க  போகிறோம் என்று தொடங்கி பலத்த கைதட்டல்களுக்கிடையில் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் 8 வது பாகம் வெளியாகுமென்று அறிவித்தார்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரிலீசாகும் என்று ரிலீஸ் தேதியையும் விழா மேடையிலேயே அறிவித்துள்ளார். 8-வது பாகம் மட்டுமல்ல, தொடர்ந்து இன்னும் எத்தனை பாகம் வந்தாலும் ரசிகர்கள் பார்க்க ஆவலாகவே இருக்கின்றனர்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions