அவதாரை மிஞ்சுமா பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7

Bookmark and Share

அவதாரை மிஞ்சுமா பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7

மறைந்த நடிகர் பால் வாக்கர் நடிப்பில் உருவாகி பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 7 ஆங்கிலபடம் வசூலில் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான முதல் 17 நாட்களில் உலகம் முழுக்க 1 பில்லியன் டாலர்களை (சுமார் 6250 கோடி ரூபாய்) வசூலித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்பு அவதார் திரைப்படம் 19 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது. அதை இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் முறியடித்திருக்கிறது.

ஆனாலும் ஒட்டுமொத்த வசூலில் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் டாலர்களை (17500 கோடி ரூபாய்) வசூல் செய்து அவதார் படமே இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions