நடிப்பு பயிற்சி கொடுக்கும் பாத்திமா பாபு!

Bookmark and Share

நடிப்பு பயிற்சி கொடுக்கும் பாத்திமா பாபு!

ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக இருப்பவர் பாத்திமா பாபு. சினிமாவிலும் தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அதோடு, சென்னையில் நடிப்பு பயிற்சி கொடுக்கும் ஒரு தியேட்டர் கம்பெனியும் அவர் நடத்தி வருகிறார்.

இதில் புதிதாக நடிப்பு பயில வருபவர்களுக்கு தானே டீச்சிங் கொடுக்கிறார் பாத்திமா பாபு. அதோடு, கோர்ஸ் முடிந்ததும் ஒரு டிராமா அரங்கேற்றம் செய்கிறார். அதை பார்த்து சிறந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதற்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கிறார்.

இப்படி வாரந்தோறும் அவரது தியேட்டர் கம்பெனியில் நடிப்பு போட்டி நடக்கிறதாம். அந்தவகையில், மறைந்த கே.பாலசந்தர், பாத்திமாபாபுவின் தியேட்டர் கம்பெனியில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்திருக்கிறாராம்.

மேலும், வாரந்தோறும் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர் - நடிகைகளை அழைத்து செல்கிறார் பாத்திமாபாபு. சமீபத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் நடிகர் விஜயகுமார் கலந்து கொண்டார்.

மேலும், தனது தியேட்டர் கம்பெனியில் நடிப்பு பயிற்சி பெற வருபவர்களுக்கு சினிமா சான்சும் வாங்கித்தருகிறாராம் பாத்திமாபாபு. அவருக்கு சினிமாவில் நல்ல தொடர்பு இருப்பதால், அவரது பயிற்சி கூடத்தில் பயின்றால், எளிதில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று புதிதாக வருபவர்கள் பலரும் பாத்திமா பாபுவிடம் நடிப்பு பயிற்சி பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions