ஃபாத்திமா விஜய் ஆன்டனியின் புதிய அவதாரம்!

Bookmark and Share

ஃபாத்திமா விஜய் ஆன்டனியின் புதிய அவதாரம்!

இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி, நான் சலீம் என வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆன்டனி, சலீம் படத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இவற்றில் இந்தியா பாகிஸ்தான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டதாம்! இதனை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகின்றன.  

நான், சலீம் படங்களைப்போலவே இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளாராம் விஜய் ஆன்டனி. இப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார்.

என். ஆனந்த் இயக்கியுள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தை, விஜய் ஆன்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார்.  இந்த படத்தை ஏப்ரல் மாதம் 17- ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ஃபாத்திமா விஜய் ஆன்டனி! அதற்குள் வேலை முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தானே இயக்குநரைப்போல் களத்தில் இறங்கி இந்தியா பாகிஸ்தான் படத்தின் எடிட்டிங் உட்பட எல்லா வேலைகளையும் ஃபாத்திமா விஜய் ஆன்டனியே கவனித்து வருகிறார்.

இந்திய பாகிஸ்தான் படப்பிடிப்பில் ஸ்டார்ட் கட் சொன்னதோடு இயக்குநரின் வேலை முடிந்துவிட்டதாம். விஜய் ஆன்டனியின் அடுத்தப் படத்தில், ஃபாத்திமா விஜய் ஆன்டனி தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநராகவும் ஆனாலும் ஆச்சர்யமில்லை.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions