மீண்டும் மேடைக்கு வந்த ஃபாத்திமா விஜய் ஆண்டணி

Bookmark and Share

மீண்டும் மேடைக்கு வந்த ஃபாத்திமா விஜய் ஆண்டணி

ஒருகாலத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கியவர் ஃபாத்திமா ஹனி டிவி. சேனலுக்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியைப் பேட்டி எடுக்கப்போனபோது இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது.

பின்னர் விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொண்ட ஃபாத்திமா, அதன் பிறகு சேனல் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கினார். மனைவி வந்த நேரமோ என்னவோ... விஜய் ஆண்டணி முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஃபாத்திமா, விஜய் ஆண்டனி ஹீரோவாக உயர்ந்ததும் மேலும் பக்கபலமாக இருந்தார். ஹீரோவாக வெற்றியடைந்த விஜய் ஆண்டனி சொந்தப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்த பிறகு தயாரிப்பு நிர்வாகத்தை ஃபாத்திமாவே கவனித்து வந்தார்.

கணவரின் வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கொண்டிருந்த ஃபாத்திமா, விஜய் ஆண்டனி சம்மந்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வர மாட்டார். இப்படியாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்த ஃபாத்திமாவிடம் தற்போது அதிசயமான மாற்றம். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்ததோடு தொகுப்பாளினியாகவும் மாறினார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions