என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்

Bookmark and Share

என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது தங்கல் மகள்களுக்காக செய்து வரும் வேலை தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தில் அவருக்கு மகள்களாக நடித்தவர்கள் பாத்திமா சனா ஷேக், சானியா மல்ஹோத்ரா.

பாலிவுட்டில் சென்று ஆமீர் கான் பெயரை சொன்னால் அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார், யார் விஷயத்திலும் தலையிட மாட்டார் என்பார்கள். இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது.

பாத்திமா சனா ஷேக் மற்றும் சானியா மல்ஹோத்ராவுக்கு காதல் உள்ளிட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அறிவுரை வழங்குகிறாராம் ஆமீர் கான். அது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.ஆமீர் கானும், பாத்திமா சனா ஷேக்கும் தங்கல் படம் மூலம் நெருக்கமாகிவிட்டார்களாம்.

தான் நடிக்க உள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் பாத்திமாவை ஹீரோயினாக்கியுள்ளார் ஆமீர்.தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் ஹீரோயினாக வாணி கபூரை நடிக்க வைக்க விரும்பினார் இயக்குனர் ஆதித்ய சோப்ரா.

ஆனால் ஆமீர் கான் தான் அடம்பிடித்து பாத்திமாவை ஹீரோயினாக்கியுள்ளார்.ஆமீர் கானும், பாத்திமாவும் ஒன்றாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறார்களாம். ஆமீர் கான் பாத்திமாவுடன் நெருங்கிப் பழகுவது அவரின் மனைவி கிரண் ராவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!
இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷீட்டி மீது போலீசில் புகார் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions