பேஸ்புக்கை மையமாக வைத்து தயாரான எப் பி!

Bookmark and Share

பேஸ்புக்கை மையமாக வைத்து தயாரான எப் பி!

எஸ்.எஸ்.வி.எஸ். எஸ்.எஸ்.கே புரொடக்சன்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனம் தயாரித்துள்ள படம் எப் பி- சேட்டஸ் போடு சாட் பண்ணு. பேஸ்புக்கை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இந்த படத்தின் ஹீரோ- வில்லன் எல்லாமே பேஸ்புக் தானாம்.

 இப்படத்தை சிவி என்ற படத்தை இயக்கிய செந்தில் நாடன் இயக்கியிருக்கிறார். சுரேஷ்சர்மா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மாஜி ஹீரோ ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அவர்களுடன் அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், ஷாம்ஸ், பாண்டு உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது படம் குறித்து இயக்குனர் செந்தில் நாடன் கூறுகையில், இது ரெகுலர் படமில்லை. அதோடு ஹேப்பியான எண்டிங்காக இருக்காது. பேஸ்புக்கில் ராங்காக கைடு ஆகி அதிலிருந்து தப்பிப்பது பற்றியான கதை.  

இதில், 3 ஹீரோயினிகள் என்றாலும் யாரும் ஹீரோயினியாக தெரியாது. ஒவ்வொரு கேரக்டராக வருவார்கள். ஷாட் பண்ணுவார்கள். மற்றபடி கமர்சியல் நோக்கத்தில் மூன்று ஹீரோயினிகளை படத்தில் வைக்கவில்லை.

பேஸ்புக் மூலமாக ஒரு பிரச்சினையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூரிலும் வெளியாகிறது என்றார்.

அவரைத் தொடர்ந்து படத்தின் நாயகன் சுரேஷ்சர்மா பேசும்போது, இந்த படத்தில் நடிக்க இயக்குனர் கதை சொன்னபோது என்னால் இந்த பாத்திரத்தை சரியாக செய்ய முடியுமா என்று தயங்கினேன்.

ஆனால் அவர் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். மற்றபடி நான் உங்களை மோல்டு செய்து கொள்கிறேன் என்றார். அப்படி நடிக்கத் தொடங்கியபோது, 2 நாள் பயமாக இருந்தது அதன்பிறகு தைரியமாக நடித்து விட்டேன்.

என்னை கதாநாயகனாக சொன்னாலும், இந்த படத்தில் எப் பி -என்பதுதான் ஹீரோ. மற்றபடி நாங்கள் எல்லோரும் அதில் வரும் கேரக்டர்கள்தான். மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர்கள் ரகுமான், ஷாம்ஸ் ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions