ஃபெமினா விருதுகள்: சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்த நடிகைகள்

Bookmark and Share

ஃபெமினா விருதுகள்: சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்த நடிகைகள்

மும்பையில் நடந்த ஃபெமினா பியூட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகைகள் அசத்தலாக வந்திருந்தனர். ஃபெமினா பியூட்டி விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கஜோல், ஹூமா குரேஷி உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நடிகைகள் வந்திருந்தனர். நடிகைகள் அனைவரும் கவுன் அணிந்து வந்திருந்தனர். யாராவது சேலையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நடிகை கஜோலுக்கு காலத்தால் அழியாத அழகு விருது வழங்கப்பட்டது. அவர் வெள்ளை நிற ஸ்கர்ட், சட்டையில் அழகாக வந்திருந்தார்.

ஃபெமினா ஸ்டைல் விருது நடிகை சோனம் கபூருக்கு வழங்கப்பட்டது. அவர் வழக்கம் போல டிசைனர் கவுனில் அசத்தலாக வந்திருந்தார்.

சாரா ஜேன் டயஸ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற நடிகை சாரா ஜேன் டயஸ் கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார். ஆனால் அவரது மேக்கப் தான் அவருக்கு கை கொடுக்கவில்லை.

நடிகை ஸ்ரேயா சரண் சிவப்பு நிற கவுனில் அம்சமாக இருந்தார். ஆடைக்கு ஏற்றவாறு மேக்கப்பும் போட்டிருந்தார்.

நடிகை சுர்வீன் சாவ்லா கௌரி மற்றும் நைனிகா வடிவமைத்த கவுனில் அழகாக இருந்தார்.நடிகை ஹூமா குரேஷி அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அவருக்கு பொருந்தவில்லை என்று தான் கூற வேண்டும்.கோலிவுட், டோலிவுட் தவிர பாலிவுட்டிலும் நடித்து வரும் டாப்ஸி டிசைனர் கவுனில் அழகாக இருந்தார்.


Post your comment





Related News
விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்
சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா
IIFA South Utsavam விருது 2017- விருதுக்கு தேர்வானவர்களின் விவரம்
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை
நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்!
ஆஸ்கர் பரிந்துரை குழுவில் நடந்த தகராறு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions