முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!

Bookmark and Share

முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!

ரஜினியின் ‘கபாலி’ நேற்று ரிலீஸ் ஆனது. இதை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் நாளில் ரஜினி படத்தை பார்த்தால் அது பெரிய சாதனை என்பதாகவே பலர் கருதினார்கள். அந்த அளவு ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் பார்த்தே தீர்வது என்பதில் பெரும்பாலானோர் உறுதியாக இருந்தனர்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரஜினியின் 'கபாலி'க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. தமிழ்நாட்டில் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். ரசிகர்களிடம் மட்டுமல்ல. படம் பார்க்க விரும்பிய அனைவருமே உற்சாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

'கபாலி' படம் உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 500-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 500 தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சியாக நடந்தது. 2 ஆயிரம் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை ‘ஹவுஸ்புல்’ காட்சிகளாக நடந்தன. சராசரியாக 90 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அண்டை மாநிலங்களிலும் இதுபோன்ற நிலை இருந்தது. இந்தியாவில் வெளியான ‘கபாலி’ க்கு முதல் நாளில் 50 சதவீதம் முதல் 60 சத வரவேற்பு இருந்தது.

'கபாலி' உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ இந்தி படத்திற்கு முதல் நாள் வசூல் ஆன ரு.36 கோடி சாதனை என்று கூறப்பட்டது. இது அதையும் மிஞ்சி இருக்கிறது. இது இந்தி படங்களுக்குகூட இல்லாத மிகப்பெரிய வசூல் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவார காலத்தில் ‘கபாலி’ பட வசூல் ரூ.120 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. 'கபாலி'யில் ரஜினியின் வித்தியாசமான நடிப்பு பற்றி பேசப்படுகிறது. 'கபாலி' படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்தது. திரையிட்ட முதல் நாளிலேயே வசூல் சாதனை செய்து இருக்கிறது. அடுத்து வரும் நாட்களிலும் சாதனைகள் தொடரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட "கருத்துகளை பதிவு செய்" படத்தின் First Title Look.
தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இவரா ஸ்ரீ தேவியின் முதல் கணவர்? - புகைப்படம் உள்ளே.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions