போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்

Bookmark and Share

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்

போர்ப்ஸ் வணிக பத்திரிகை, 2016-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்களுக்கு பின்புலமாக இருந்த முன்னணி 10 ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது.

நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் 120 கோடி டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. இவர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அடுத்து கிரிஸ் இவான்ஸ் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகிய நடிகர்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இவர்கள் நடித்த திரைப்படங்கள் தலா 115 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. நடிகை மார்காட் ரோபீ நடித்த படங்கள் 110 கோடி டாலரை அள்ளி இருக்கின்றன. எமி ஆடம்ஸ் படங்கள் 104 கோடி டாலர் ஈட்டி உள்ளன. இதனையடுத்து போர்ப்ஸ் பட்டியலில் இவர்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.பென்அஃப்லெக் நடித்து வெளிவந்த படங்கள் 102 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. இவர் ஆறாவது இடத்தில் இருக்கிறார். நடிகர் ஹென்றி கவில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவரது திரைப்படங்கள் 87 கோடி டாலர் வசூல் செய்திருக்கின்றன.

ரயன் ரினால்ட்ஸ் நடித்த படங்களின் டிக்கெட் விற்பனை 82 கோடி டாலரை எட்டியதை அடுத்து போர்ப்ஸ் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். பெலிசிட்டி ஜோன்ஸ் படங்கள் 80 கோடி டாலரும், வில்ஸ்மித் படங்கள் 77 கோடி டாலரும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. இவர்கள் இருவரும் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளனர்.
போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2016 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில், வருவாய் அடிப்படையில் (ரூ.270 கோடி) பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்தில் உள்ளார். 


Post your comment





Related News
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
நான் போட்டோ எடுக்க மறுத்தேன், விஜய் அண்ணாவே என்னை அழைத்தார்- ரின்ஸ்ன் உருக்கம்
தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
தனுஷின் தந்தை இவரா?
துள்ளாத மனம் துள்ளும் செம்ம ஹிட் தான், ஆனால் விஜய்க்கு மறக்க முடியாத ஒரு வருத்தம்?
கேரளா விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்- புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions