ஒரேநாளில் களமிறங்கும் குரு - சிஷ்யன்

Bookmark and Share

ஒரேநாளில் களமிறங்கும் குரு - சிஷ்யன்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இசைவெளியீடு நடைபெறும் அதே நாளில் தான் நடித்த மாரி படத்தின் இசைவெளியீட்டை நடத்த திட்டமிட்டிருந்தார் தனுஷ். இதன் பின்னணி வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததுதான். மாரி பட ஆடியோவை 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்.

4 ஆம் தேதி த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இசைவெளியீடு நடைபெறுகிறது.அதேநாளில் விமல், அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் 'மாப்ள சிங்கம்' படத்தின் ஆடியோவும் வரும் ஜூன் 4ஆம் தேதிதான் வெளியாகிறது.

இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் என்.ஆர்.ரகுநந்தன். 2010ல் வெளிவந்த 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்.ஆர்.ரகுநந்தன். அதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் அவர்.

ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக அறிமுகமான 'மதயானைக்கூட்டம்' படத்திற்கும் என்.ஆர்.ரகுநந்தனே இசை அமைத்தார்.  இந்நிலையில் குரு - சிஷ்யன் இருவருமே ஜூன் 4ல் தங்களது ஆல்பங்களை வெளியிடுகின்றனர். ஆனாலும் ஜி.வி.பிரகாஷ்குமார் - ரகுநந்தன் இடையில் நல்ல நட்பு தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions