எமிஜாக்சனுக்கு டார்லிங்கான ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

எமிஜாக்சனுக்கு டார்லிங்கான ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் டார்லிங்காக இடம் பிடித்தார். இப்படம் வெற்றி பெறவே ஜி.வி.க்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பென்சில்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த சங்கர் மற்றும் குணா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதையமைக்கும் இப்படத்திற்கு அட்லி வசனம் எழுதவுள்ளார். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரிக்கிறார்.

மேலும் இப்படம் குறித்த முழுவிவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions