கப்பார் இஸ் பேக் படத்தை பாராட்டிய டில்லி முதல்வர்!

Bookmark and Share

கப்பார் இஸ் பேக் படத்தை பாராட்டிய டில்லி முதல்வர்!

இன்றைக்கும் 'ரமணா' படம் டிவி.யில் ஒளிபரப்பாகும்போது பலரும் டக்கென்று சேனலை மாற்ற மனசு வராமல் அதிலேயே கொஞ்ச நேரம் லயித்துவிடுவது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை.

அந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் லஞ்சத்திற்கு எதிரான தாக்கத்தை அந்தப்படத்தின் மூலம் ஏற்படுத்தினார் முருகதாஸ். அதில் நடித்த விஜயகாந்த்துக்கும், அதன் தெலுங்கு ரீமேக்கில் நடித்த சிரஞ்சீவிக்கும் அரசியலில் நுழைய அடித்தளம் அமைத்து கொடுத்த கதை அல்லவா அது..? அப்படிப்பட்ட கதையைத்தான் இந்தியில் அக்சய் குமார் நடிக்க 'கப்பார் இஸ் பேக்' என்கிற பெயரில் ரீமேக் செய்து கடந்த வாரம் ரிலீஸ் செய்தார்கள்.

க்ரிஷ் இயக்கியிருந்த இந்தப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில்அதை பாராட்டியுள்ளார்.

 “கப்பார் இஸ் பேக்'' படம் பார்த்தேன்.. அருமையான படம். நீங்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்” என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். லஞ்ச, ஊழலுக்கு எதிராக ஒரு கட்சியை ஆரம்பித்து, மக்களின் அமோக ஆதரவுடன் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய கெஜ்ரிவால் தானே முன்வந்து பாராட்டியதால் இந்தப்படம் ரசிகர்களிடம் இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions