முதல்நாளே ரூ.13 கோடி வசூல் செய்த கப்பார் இஸ் பேக்

Bookmark and Share

முதல்நாளே ரூ.13 கோடி வசூல் செய்த கப்பார் இஸ் பேக்

அக்ஷய்குமார் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்தி படம் ‘கப்பார் இஸ் பேக்’. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்தில் அக்ஷய்குமாருடன் ஸ்ருதிஹாசன், சுனில் குரோவர், சுமன் தல்வார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கரீனா கபூர் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.13.05 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரவுக் காட்சிகளில் பாக்ஸ் ஆபீசில் நிலையான இடத்தை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி, வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சபீனா கான் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

இப்படம் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த ரமணா படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் இப்படத்தை பெரும் பொருட்செலவில் எடுத்திருந்தனர். ‘கப்பார் இஸ் பேக்’ தமிழகத்திலும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions