சர்தார் என மாறும் கபார் சிங் 2

Bookmark and Share

சர்தார்  என மாறும் கபார் சிங் 2

நடிகர்  பவன் கல்யாண் நடிப்பில் வளர்ந்து வரும் கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கபார் சிங் 2 என பெயரிடவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்தின் தலைப்பு சர்தார் என மாற்றப்படும் என்று டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது இப்படத்திற்கு சர்தார் என்ற தலைப்பையே உறுதி செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குநர் பாபி இயக்கி வருகின்றார். புனேவில் துவங்கிய இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்புகள்  முடிவடைந்துள்ளது.

விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தார் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions