கானா பாலாவுக்கு கிடைத்த இந்த ஆண்டின் முதல் சரக்குப்பாட்டு!

Bookmark and Share

கானா பாலாவுக்கு கிடைத்த இந்த ஆண்டின் முதல் சரக்குப்பாட்டு!

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் என இரண்டு முகம் கொண்ட தீபக், இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படம் மூலம் வெள்ளித்திரைக்கு வருகிறார். எஸ்.என்.சக்திவேல் இயக்கும் இந்த படத்தில் தீபக்கிற்கு ஜோடியாக மலையாள நடிகை நேகா நடித்துள்ளார்.

இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், சென்ட்ராயன், குமரவேல், லொள்ளு சபா சாமிநாதன்,எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது, இப்படம் குறித்து கானா பாலா பேசுகையில், கடந்த ஆண்டு நான் பல படங்களில் சரக்குப்பாடல் பாடியிருக்கிறேன். அதில் பெரும்பாலும் ஹிட்தான். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நானே பாட்டு எழுதி, பாடி, நடித்து வெளியாகும் முதல் பாடல் இந்த இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில்தான் கிடைத்திருக்கிறது.

இந்த பாடலை ஜாலியாக மட்டுமே எழுதாமல் கருத்துக்களையும் கலந்து எழுதியிருக்கிறேன். அதோடு இந்த படத்தின் நாயகன் தீபக், விஜய் டிவியில் வரும் நீயா நானா கோபி போன்று வருவதற்காக முயற்சி எடுக்கிற வேடத்தில் நடிக்கிறார்.

அதனால் அந்த விசயங்களையும் இந்த பாடலில் சொல்லியிருக்கிறேன். அதனால் இந்த சரக்குப்பாட்டு கதையோடும் கலந்த பாடலாகவே வந்திருக்கிறது என்று பேசிய கானா பாலா, இந்த ஆண்டின் எனது இந்த முதல் பாடலும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions