பங்ச்சுவாலிட்டி பாடகர் கானா பாலா

Bookmark and Share

பங்ச்சுவாலிட்டி பாடகர் கானா பாலா

அட்டகத்தி படத்தின் மூலம் பாடகராக படத்துறையில் அறிமுகமானார் கானா பாலா. அப்படத்தின் பாடல்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, திடீர் புகழ் பெற்றார். அதுமட்டுமல்ல மளமளவென ஏராளமான படங்கள் அவருக்கு புக்காகின.

பாடகராகவும், பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றிய கானா பாலாவை நடிகராகவும் ஆக்கினார்கள். அவர் பாடும் பாடலை திரையில் தோன்றி அவரே பாடுவதுபோல் பல படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டன.

அதனால் தான் பாடும் அனைத்து பாடல்களையும் திரையிலும் நானேதான் பாடுவேன் என்று கண்டிஷன் போடும் அளவுக்கு நிலமை விபரீதமானது. இது ஒரு பக்கம் இருக்க, வெற்றி வந்த பிறகு தன்னைச் சுற்றி ஜால்ராக்களை வைத்துக் கொள்ளாமல் எங்கு சென்றாலும் தனியாகத்தான் செல்கிறார்.

அதுமட்டுமல்ல எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் சொன்ன நேரத்துக்கு ஆஜராகிவிடுகிறார். அண்மையில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு கானா பாலாவை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். சொன்ன நேரத்துக்கு அந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்ட அரங்குக்கு சென்று விட்டார் கானா பாலா.

அந்த சேனலைச் சேர்ந்த யாருமே அவரை கண்டு கொள்ளவில்லையாம். அரை மணி நேரம் அங்கேயே காத்திருந்திருக்கிறார். யாரும் அவரை வரவேற்கவில்லை. கோபித்துக் கொண்டு திரும்பிச்சென்றுவிட்டார்.

சில மணி நேரம் கழித்து அந்த சேனல் நிர்வாகத்தினர் கானா பாலாவை தொடர்பு கொண்டபோது, தான் குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கு வந்ததையும் யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதையும் சொன்ன கானா பாலாவை மீண்டும் வரும்படி அழைத்துள்ளனர். வர மறுத்துவிட்டார்.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions