100% சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கானா பாலா இசை நிகழ்ச்சி!

Bookmark and Share

100% சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கானா பாலா இசை நிகழ்ச்சி!

வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திரைப்பட பாடலாசிரியர் கானா பாலா இசை கச்சேரி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் திரைப்பட பாடகர் கானா பாலா எழுதி இசையமைத்த விழிப்புணர்வு பாடல் இசை குறந்தகட்டை இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் காஞ்சன் பிரசாத் வெளியிட்டார். கலெக்டர் நந்தகோபால் பெற்றுக் கொண்டார்.

இசை நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பாடல்கள் பாடப்பட்டன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் நேர்மையாகவும், நியாயமாகவும், தேர்தலில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன வீடியோ வாகனத்தின் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு வீடியோ படகாட்சி ஒளிபரப்பட்டது. இவற்றை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டுகளித்தனர்.


Post your comment

Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions