பணமும், புகழும் போதும் மற்றவர்களுக்கு கொடுங்கள்: கானா பாலா அதிரடி

Bookmark and Share

பணமும், புகழும் போதும் மற்றவர்களுக்கு கொடுங்கள்: கானா பாலா அதிரடி

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திற்குள் உயரமான இடத்திற்கு வந்திருப்பவர் கானா பாலா. தனக்கு பணமும், புகழும் போதும் மற்ற கானா பாடர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார் கனா பாலா. மேலும் அவர் கூறியதாவது:

நான் சாவு வீட்டுல பாடிக்கிட்டிருந்தேன். என் நண்பன் ரஞ்சித் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தான். நான் நினைக்காததெல்லாம் எனக்கு கிடைச்சது. எனக்கு மட்டுமல்ல என் மனைவிக்கு என் குடும்பத்துக்கு எல்லாருக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைச்சுது. வேண்டிய அளவுக்கு பணம் கிடைச்சுது. சினிமாவுக்கு மட்டும் இதுவரை 75 பாடல் எழுதியிருக்கேன். 300 பாடல்கள் பாடியிருக்கேன்.

என் தகுதிக்கு இதுவே அதிகம். பாடல் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து விட்டேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் செய்கிறேன். இது எனக்கு போதும் 200 கானா பாடகர்கள் சென்னையில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று இசை அமைப்பாளர்களிடம் கேட்டு வருகிறேன். இதுவரை இரண்டு மூன்று விருதுகள் வாங்கி இருப்பேன்.

இனி அரசு விருது தவிர வேறு விருதுகளை வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

இப்போது வேளாங்கண்ணி மாதா பற்றிய ஆல்பம் ஒன்றை பாடி வருகிறேன். அடுத்து நாகூர் ஆண்டவர் பற்றிய ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறேன். அதன் பிறகு அய்யப்பன் பாட்டு ஆல்பம் ஒன்று இப்படி ஆன்மீகம் பக்கம் திரும்பியிருக்கிறேன்.

அது மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. இப்போது பெண்களை கிண்டல் செய்தோ, குறைத்து மதிப்பிட்டோ பாடல் எழுதுவதில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறியே பாடல் எழுதுகிறேன். என்றார் கானா பாலா.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions