மார்க்கெட்டை பிடிக்க முயற்சிக்கும் கானா உலகநாதன்!

Bookmark and Share

மார்க்கெட்டை பிடிக்க முயற்சிக்கும் கானா உலகநாதன்!

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற படத்தில் இடம்பெற்ற வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம்... என்ற ஒரேயொரு பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டவர் கானா உலகநாதன்.  அதோடு அந்த ஒரு பாடலை வைத்தே உலகமெங்கிலும் நடைபெற்ற தமிழ் இசைகச்சேரிகளில் பாடி புகழ் சேர்த்துக்கொண்டார் உலகநாதன்.

ஆனபோதும், அதன்பிறகு தமிழ் சினிமாவை கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது குரலை பின்னர் எந்த படத்திலும் அவ்வளவாக கேட்க முடியவில்லை.

மாறாக, அதைத் தொடர்ந்து அட்டகத்தி படத்தில்,  ஆடி போனா ஆவணி என்று பாடியபடி என்ட்ரியான கானா பாலா கோடம்பாக்கத்தின் பிரதான கானா பாடகராகி விட்டார்.

இந்த நிலையில், தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில படங்களில் கிடைத்த சிறிய வேடங்களில் நடித்து வரும் கானா உலகநாதன், தற்போது சில இசையமைப்பாளர்களின் இசைக்கூடார கதவுகளையும் தட்டத் தொடங்கியிருக்கிறார்.

அதோடு, தானே எழுதி டியூன் போட்டு வைத்திருக்கும் கானா பாடல்களையும் உச்ச ஸ்தாயியில் பாடியும் காண்பித்து தனக்கு கைகொடுக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions